இந்த வாரம் என்ன
பிப். 17 மாசி 5 சனி* சந்திர தரிசனம், சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்துதல் * திருநள்ளாறு சனி பகவான் ஆராதனைபிப். 18 மாசி 6 ஞாயிறு* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை,* திருஷ்டி கழிக்க நல்ல நாள்பிப். 19 மாசி 7 திங்கள்* முகூர்த்த நாள்* விக்ன விநாயகர் சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல்* செடி, கொடி நட நல்ல நாள்பிப். 20 மாசி 8 செவ்வாய்* திருச்செந்துார் சுப்பிரமணியர் மாசி திருவிழா ஆரம்பம்* காஞ்சி காமாட்சி, மதுரை நன்மை தருவார், கோவை கோனியம்மன், நத்தம் மாரியம்மன் கோயில்களில் உற்சவம் ஆரம்பம்பிப். 21 மாசி 9 புதன்* சஷ்டி விரதம்* திருகோஷ்டியூர் சவுமிய நாராயணர், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில்களில் உற்சவம் ஆரம்பம்பிப். 22 மாசி 10 வியாழன்* கார்த்திகை விரதம்* முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்* சென்னை திருப்போரூர் முருகன் பிரணவ உபதேசம் அருளிய காட்சிபிப். 23 மாசி 11 வெள்ளி* அஷ்டமி விரதம் * பைரவருக்கு வடை மாலை அணிவித்தல்* திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் பால் காவடி, தங்க ரத பவனி