இந்த வாரம் என்ன
ஏப்.17, சித்திரை 4: முகூர்த்த நாள், ஸ்ரீரங்கம் பெருமாள் கருடவாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி, சமயபுரம் மாரியம்மன் தெப்பம், திருப்பத்துார் திருத்தளிநாதர் ஜெயந்தன் பூஜை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்ஏப்.18, சித்திரை 5: ஏகாதசி விரதம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கருடசேவை, கோவை தண்டுமாரியம்மன் பவனி, சென்னை மல்லீஸ்வரர் நடனக்காட்சி, ஸ்ரீரங்கம் பெருமாள் சந்தனமண்டபம் எழுந்தருளல், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் பவனி, மதுரை கூடலழகர் பவனி, திருநாவுக்கரசர் குருபூஜைஏப்.19, சித்திரை 6: திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீரங்கம் பெருமாள் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை அனுமன் திருமஞ்சனம், அகோபிலமடம் 32வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், கரிநாள்ஏப்.20, சித்திரை 7: பிரதோஷம், மத்ஸிய ஜெயந்தி, செம்பொனார்கோயில் சொர்ணபுரீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம், திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் பூப்பல்லக்கு, கோவை தண்டுமாரியம்மன் பவனி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம்ஏப்.21, சித்திரை 8: மாத சிவராத்திரி, ஸ்ரீரங்கம் பெருமாள் வண்டலுார் சப்பரம், திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் பூதவாகனம், செம்பொனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி, மதுரை வீரராகவப்பெருமாள், வீரபாண்டி கவுமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்ஏப்.22, சித்திரை 9: அமாவாசை விரதம், ஸ்ரீரங்கம் பெருமாள் தேர், திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் யானை வாகனம், செம்பொனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்ஏப்.23, சித்திரை 10: திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் ரிஷபசேவை, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, மதுரை வீரராகவப்பெருமாள் பவனி, ஸ்ரீரங்கம் பெருமாள் சப்தாவர்ணம் சாற்றுமுறை, வாஸ்துநாள், பூஜை நேரம் காலை 8:54 - 9:30 மணி, வடுகநம்பி திருநட்சத்திரம்.