இந்த வாரம் என்ன
ஜூன் 30 ஆனி 15: திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஆழ்வார் திருநகரில் நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு. ஜூலை 1 ஆனி 16: சனிப்பிரதோஷம். சகல சிவன் கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. திருக்கோளக்குடி, கண்டதேவி, காணாடு காத்தான் தலங்களில் பெருமான் தேர். சென்னை திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் புறப்பாடு. நாதமுனிகள் திருநட்சத்திரம். ஜூலை 2 ஆனி 17: காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா. மன்னார்குடி ராஜ கோபால சுவாமி வெண்ணைத்தாழி சேவை. சாத்துார் வெங்கடேசப்பெருமாள் புறப்பாடு.ஜூலை 3 ஆனி 18: சாதுார் மாஸ்ய விரதம் ஆரம்பம். வியாசபூஜை, பவுர்ணமி, அருணகிரிநாத சுவாமிகள் குருபூஜை. சென்னை மதுராந்தகம் கோதண்ட ராமசுவாமி புறப்பாடு.ஜூலை 4 ஆனி 19: திருத்தங்கல் நின்ற நாராயணர் குதிரை வாகனத்திலும், தாயார் பூஷ்ப பல்லக்கிலும் வீதி உலா. அஹோபில மடம் ஸ்ரீமத் 13வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.ஜூலை 5 ஆனி 20: முகூர்த்த நாள். திருவோண விரதம். காஞ்சிபுரம் வரதராஜர் ஜேஸ்டாபிஷேகம். கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு. இன்று தென்னை, பலா, மா, புளி வைக்க நன்று.ஜூலை 6 ஆனி 21 : சங்கடஹர சதுர்த்தி. சகல சிவன் கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. சுவாமி மலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.