இந்த வாரம் என்ன
ஜூலை 28 ஆடி 12: ஆடி இரண்டாம் வெள்ளி. சங்கரன் கோவில் கோமதியம்மன் பூப்பல்லக்கில் பவனி. மதுரை மீனாட்சியம்மன் சட்டத்தேர். இரவு புஷ்ப விமானத்தில் புறப்பாடு. ஜூலை 29 ஆடி 13: கலியநாயனார், கோட்புலிநாயனார் குருபூஜை. ராமேஸ்வரம் ராமநாதர் பர்வதவர்த்தினி தங்க கேடயத்தில் பவனி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம். ஜூலை 30 ஆடி 14: பிரதோஷம். சகல சிவபெருமான் கோயில்களில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. மதுரை அழகர்கோவில் கள்ளழகர் சூர்ணோற்ஸவம். புஷ்ப விமானத்தில் பவனி. ஜூலை 31 ஆடி 15: சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் கோவில் உற்ஸவம் ஆரம்பம். வடமதுரை சவுந்தரராஜப்பெருமாள் குதிரை வாகனம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம். ஆகஸ்ட் 1 ஆடி 16: ஆடி மூன்றாம் செவ்வாய். திருவோணவிரதம். பவுர்ணமி. பட்டினத்தார் குருபூஜை. ஆளவந்தார் திருநட்சத்திரம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசுக்காட்சி. அவிநாசி அவிநாசியப்பர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு. ஆகஸ்ட் 2 ஆடி 17: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள், சாத்துார் வேங்கடேசப்பெருமாள், கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் சீனிவாசப்பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. ஆகஸ்ட் 3 ஆடி 18: சகல நதிகளில் ஆடி பெருக்கு விழா. வடமதுரை சவுந்தரராஜப்பெருமாள் வஸந்த உஸ்ஸவம். திருப்பதி ஏழுமலையப்பனுக்கு புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.