உள்ளூர் செய்திகள்

வேண்டுதல் நிறைவேறணுமா

* விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் சிவனுடைய அம்சம். அதனால் தான் சிங்கத்திற்கு பதில் நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளனர். அம்மனுக்குரிய அபிேஷக தீர்த்தத்தை சாப்பிட்டு வர கண்நோய் குணமாகும்.* மதுரை சோழவந்தான் ஜெனகை மாரியம்மனின் அபிஷேக தீர்த்தம் அம்மைநோய் வந்தவர்களுக்கு அருமருந்தாக அமைந்துள்ளது. * தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க தானியங்கள் காய்கறிகள் கனிகள் படைக்கப்படுகின்றன. * திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் கொடிமரத்தில் உப்பு மஞ்சள் சமர்ப்பித்தால் வேண்டுதல் நிறைவேறும். * காரைக்குடி முத்துபட்டினம் மீனாட்சிபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தக்காளி பழச்சாறு அபிஷேகம் செய்தால் உடல் இளமை பொலிவு பெறும்.