அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
வீட்டில் பூஜை செய்யும் முறையைப் பற்றி விளக்கினார் காஞ்சி மஹாபெரியவர். அப்போது பக்தர் ஒருவரின் வீட்டில் சாஸ்திரிகள் மூலம் லட்சுமி பூஜை நடத்திய சம்பவத்தையும் தெரிவித்தார். பூஜையும் நடக்க வேண்டும்; ஆனால் பணம் செலவாகக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர் அந்த பக்தர். பூஜைக்கான பொருட்களை முழுமையாக அவர் வாங்கவில்லை. வேறு வழியின்றி இருப்பதைக் கொண்டு பூஜை நடத்தினார் சாஸ்திரிகள். இல்லாத பொருட்களுக்கு மந்திரப்பூர்வமாக 'அட்சதாம் சமர்ப்பயாமி' என சொல்லியபடி பூஜை செய்யலாம் என்ற விதிமுறை உள்ளது. அதனடிப்படையில் சந்தனம் இல்லையா... சந்தனத்திற்கு பதிலாக அட்சதாம் சமர்ப்பயாமி, துாபம் இல்லையா, துாபத்திற்கு பதிலாக அட்சதாம் சமர்ப்பயாமி என சொல்லியபடி சாஸ்திரிகள் பூஜையை நடத்தினார். நிறைவாக சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும் அல்லவா... அதற்கான உத்தியை சாஸ்திரிகள் மூலம் பக்தர் தெரிந்து கொண்டு விட்டாரே? பொருள் இல்லாவிட்டால் அதற்கு 'அட்சதாம் சமர்ப்பயாமி' என சொல்ல வேண்டும்... அவ்வளவு தானே! சிறிது அட்சதையைத் தட்டில் வைத்து சாஸ்திரிகளிடம் கொடுத்து, 'தட்சணார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி' என்றாரே பார்க்கலாம். இதைச் சொல்லி விட்டு மஹாபெரியவர் சிரிக்க அனைவரும் சிரித்தனர். எளிய எருக்கம்பூவையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கொடுத்தால் கடவுள் அருள்புரிவார். ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தைக் கேட்டு தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பெய்தவள் தானே மகாலட்சுமி. இதை தினமும் மாலை நேரத்தில் விளக்கேற்றி (5:30 - 7:30 மணிக்குள்) சொல்பவர் வீட்டில் அலைமகளான மகாலட்சுமி தங்குவாள் என்றார் மஹாபெரியவர். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.