அனந்தப்பூரின் தாகம் தீர்த்தவர்
UPDATED : நவ 18, 2016 | ADDED : நவ 18, 2016
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள புக்கப்பட்டினம், கோத்தசெருவு, புட்டபர்த்தி ஆகிய பகுதிகளில் வறட்சி நிலவியது. ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் 600 அடிக்கும் கீழே சென்றதோடு, நீரில் புளோரைடு உப்பின் அளவு, 2 பிபிஎம் முதல் 4 பிபிஎம் வரை இருந்தது. 1பிபிஎம் அளவில் இருப்பதே உடல்நலனுக்கு உகந்தது. இதனால் இப்பகுதி மக்கள் உடல்நலக் குறைவுக்கு ஆளாயினர். இதையறிந்த பாபா, 1995ல் சத்யசாய் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை துவங்கினார். இதன் மூலம் 731 கிராம மக்கள் சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெற்றனர். 12.5 லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமான குடிநீர் வழங்கப்பட்டது. இதன் பயனைப் பெற்ற மக்கள் சாய்பாபாவை தாகம் தீர்த்த வள்ளலாக வணங்கிப் போற்றினர்.