மதங்களை கடந்த மகான்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி தாமஸ். இவர் பாதுகாப்பு பணிக்காக அவ்வப்போது காஞ்சி மடத்துக்கு வருவதுண்டு. அவருடைய மகனுக்கு படிப்பில் ஆர்வமில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினான். ஆர்வமின்றி படித்தால் பலன் கிடைக்குமா... பெயில் ஆனான். பெற்றோருக்கு தெரிந்தால் நிலைமை மோசமாகும் என்பதால் வீட்டை விட்டு ஓடினான்.மகனைக் காணாததால் பெற்றோர் தவித்தனர். போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் நிலை குலைந்து போனார் தாமஸ். பிரிவைத் தாங்க முடியாமல் மனைவியின் உடல்நிலையும் பாதித்தது. மகன் ஓடிப் போன விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என நினைத்தார். காஞ்சி மஹாபெரியவரிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்பதால் மடத்திற்கு வந்தார். எப்படி விஷயத்தை ஆரம்பிக்கலாம் என யோசித்த போது, 'ஏம்ப்பா தாமஸ்... உன்னால எனக்கு சின்ன உதவி தேவைப்படுது... முடியுமா?' எனக் கேட்டார் சுவாமிகள்.'சொல்லுங்க சுவாமி... அவசியம் செய்றேன்' என்றார் தாமஸ். 'உங்க சர்ச்சுக்கு பின்புறம் சிவன் கோயில் இருக்கு தெரியுமா... அங்கு பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாதபடி நாத்திகர்கள் சிலர் இடைஞ்சல் பண்றாங்க. அதைக் கொஞ்சம் என்னன்னு பாரேன்ப்பா' என்றார். அப்போதும் மகனைப் பற்றி தாமஸ் வாய் திறக்கவில்லை. உடனே கோயிலுக்குச் சென்றார். நாத்திகர்களிடம் சமரசம் பேசி பக்தர்களின் தரிசனத்துக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்தார். அன்று முதல் இக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.'மகனைப் பற்றி மஹாபெரியவரிடம் பேசவில்லையே...' என்ற கவலையுடன் வீட்டுக்கு வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மகனோ ஹாலில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கட்டித் தழுவினார். அடுத்த நாள் காஞ்சி மஹாபெரியவரிடம் விஷயத்தைச் சொல்வதற்காக மடத்திற்கு வந்தார். துாரத்தில் வரும் போதே, 'என்ன தாமஸ்... உன்னோட பையன் வந்துட்டானா?' என புன்னகையுடன் மஹாபெரியவர் கேட்டாரே பார்க்கணும்' என் மனக்கவலையை சொல்லாத போதும், அதை குறிப்பறிந்து போக்கும் மகானாக இருக்கிறாரே மஹாபெரியவர்' என நெகிழ்ந்தார் போலீஸ் அதிகாரி தாமஸ். மதங்களை கடந்த மகான் அல்லவா மஹாபெரியவர். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய். * குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று; உன் கஷ்டம் தீரும்.* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு கொடு.* உன் முன்னோரை காப்பாற்றிய குலதெய்வம் உன்னையும் காக்கும். உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!--நாராயணீயம்எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com