உள்ளூர் செய்திகள்

கிடைத்தது புண்ணியம்

ராமாயணத்தில் பரசுராமரும், ராமரும் மோதிக் கொள்வது போல ஒரு காட்சி வருகிறது. இதை படிப்பவர்கள் தெய்வங்களே மோதிக் கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை.ராமன் சீதாவை இழந்து தவிக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்தவர் பரசுராமர். ஏற்கனவே, சிவதனுசுவை ஒடித்து சீதாவைக் கல்யாணம் செய்து கொண்ட ராமனிடம், ''நீ ஏற்கனவே பலரால் இழுக்கப்பட்டும், வளைக்கப்பட்டும் இற்றுப்போன சிவதனுசுவை ஒடித்ததில் ஆச்சரியமில்லை. இதோ என் கையில் இருக்கும் விஷ்ணு தனுசுவை தூக்கி நாணேற்று பார்க்கலாம்,'' என்றார். ராமனும் எளிதாக அதைச் செய்து விட்டு, இப்போது இதில் நான் தொடுத்துள்ள பாணத்திற்கு இலக்கு யார்?'' என்றார். உடனே பரசுராமர் பணிவுடன், '' நீ சுத்தவீரன். என் புண்ணியங்களின் பலனை இலக்காக கொள்,'' என்று பதிலளித்தார். ராமனுக்கு அவரது புண்ணியத்தின் பலன் கிடைத்தது. அந்த விஷ்ணு தனுசைக் கொண்டுதான் பிற்காலத்தில் ராவணனை அழித்தார் ராமன்.