உள்ளூர் செய்திகள்

வாழ வைத்த தெய்வம்

காஞ்சி மடத்தின் பக்தர் லால்குடி ஈஸ்வரன். இவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒருமுறை தங்கியிருந்தார். காஞ்சிபுரத்திற்குச் சென்று இரண்டு வேத பண்டிதர்கள், மடத்தின் மேலாளர் கிருஷ்ண மூர்த்தி அய்யரை அழைத்து வருமாறு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவிட்டார். அங்கிருந்து காஞ்சிபுரம் வந்த ஈஸ்வரன் அவர்களை அழைத்துக் கொண்டு மஹாபெரியவரின் ஆசியுடன் ரேணிகுண்டாவிற்கு வேனில் புறப்பட்டார். வழியில் லாரி ஒன்று மோதியதில் வேனில் இருந்த பெட்டி ஈஸ்வரன் மீது விழுந்தது. மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பிக்க, ஈஸ்வரன் மட்டும் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கம் தெளிந்ததும், 'என்னை காஞ்சி மஹாபெரியவரிடம் அழைத்துச் செல்லுங்கள்' என ஈஸ்வரன் அடம்பிடிக்க அழைத்துச் சென்றனர். அருகில் வந்த மஹாபெரியவர், 'உடம்பே போயிடுச்சுன்னு நெனச்சாயோ' எனக் கேட்டார். மனதில் இருப்பதை 'அப்படியே சொல்கிறாரே' என நெகிழ்ச்சிக்கு ஆளானார் ஈஸ்வரன். சுவாமிகளின் அருட்பார்வை பலத்தால் புத்துணர்ச்சி பெற்றதை உணர்ந்தார். கை கால்கள் மெதுவாக செயல்பட ஆரம்பித்தன. மறுநாள் காலையில் தானாக எழுந்ததோடு வாழ வைத்த தெய்வமான மஹாபெரியவரை நோக்கி நடந்தார். ஓரிரு வாரத்திற்குள் இயல்பு நிலையை அடைந்தார். ஈஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.எஸ்.கணேச சர்மாganesasarma57@gmail.com