உள்ளூர் செய்திகள்

பூ ஒன்று புயலானது

மகாலட்சுமி என்றால் அவள் சாந்தமான முகத்துடன் தான் இருப்பாள். வீட்டுக்கு வரும் புதிய மருமகளை 'மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள்' என்று சொல்வார்கள். ஆனால், அவளே அசுரர்களை அழிக்க கோபம் போது வீரலட்சுமியாக மாறி விடுகிறாள். பன்றி முகம் கொண்ட கோலாசுரனை வதம் செய்ததால், 'கோலாசுர பயங்கரி' என்று பெயர் பெற்றதாக மகாலட்சுமி அஷ்டகம் கூறுகிறது. கோலாசுரன் உயிர் விட்ட போது, “தாயே! என்னைக் கொன்ற இந்த இடத்தில் தங்கியிருந்து, வழிபடுவோருக்கு வெற்றியையும், செல்வத்தையும் அருள வேண்டும்,” என்று வேண்டிக் கொண்டான். கோலாசுரன் உயிர் விட்ட தலம் மகாராஷ்டிராவிலுள்ள 'கோல்ஹாப்பூர்' ஆகும். இங்கு வில், வாள், கேடயம் தாங்கிய கோலத்தில் உக்கிர தெய்வமாக லட்சுமி அருள்பாலிக்கிறாள்.