நல்லவரைத் தேர்ந்தெடுப்போம்
மன்னர் ஆட்சியை விட மக்கள் ஆட்சி உயர்வு என்றாலும் நடைமுறையில் தேர்தலில் நேரும் சிக்கல்கள் குறித்து ஒருமுறை காஞ்சி மகாசுவாமிகள் விளக்கினார். அது எவ்வளவு உண்மை என்பதை அறிந்து பக்தர்கள் வியந்தனர். 'முடியாட்சி போய்க் குடியாட்சி வந்த போது மனிதர்களைப் பார்க்காமல் கொள்கைக்குத் தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினர். அந்த காலத்தில் மன்னர் என்ற பெயரில் தனி மனித ஆதிக்கம் இருந்தது. ஆனால் மக்களாட்சியில் அதற்கு வழியில்லை எனக் கருதினர். ஆனால் நடைமுறையில் இருப்பது என்ன? தர்மம், நீதி, நேர்மை, சரியான நிர்வாகம் என எதையும் பொருட்படுத்தாமல் கட்சிகள், தனி மனிதர்களைப் பார்த்தே மக்கள் முடிவு செய்கின்றனர். 'அவர் சொன்னால் சரியாய் இருக்கும்' 'இவர் சொன்னால் தவறே இருக்காது' என்றெல்லாம் பேசுகிறார்கள். யார் எது சொன்னாலும் நம்பலாமா? 'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்' ஆராய்ந்து உண்மையைக் காண வேண்டும்! கொள்கைகளை மறந்து மனிதர்களை பிடித்துக் கொண்டு நிற்கும் வழக்கம் வந்து விட்டது. கட்சிக் கண்ணோட்டம், தனி மனிதக் கவர்ச்சிகளை மீறி உண்மையை உள்ளபடி காண்பது அரிது. யார் மீது கவர்ச்சி இருக்கிறதோ அவர்களின் பின்னால் தான் மக்கள் போகிறார்கள். ஒருவருக்கு ஞானம் இருக்கலாம். நாட்டு நலனுக்கான கொள்கைகளை வகுத்து நடத்தும் திறமை, நேர்மையான நடத்தை இருக்கலாம். ஆனால் இவை இல்லாத இன்னொருவருக்கு ஜோடித்து பேசும் சாமர்த்தியம், வசீகரம் இருக்கும். சிலர், திறமையானவரை பின்னுக்குத் தள்ளி விட்டு ஆட்சியைப் பெறுகின்றனர். விஷயம் தெரியாத பாமரர் நிலையோ மோசமாக இருக்கிறது. அவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்களோ அவர்களே வெற்றி பெற முடிகிறது. தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் தனிமனிதக் கவர்ச்சியால் வந்த முடிவே தவிர அறிவார்ந்த நிலையில் எடுப்பது அல்ல. வெற்றி பெற்றவர்கள் எதிர்க்கட்சியை எதிர் தரப்பாக கருதாமல் எதிரித் தரப்பாக பார்க்கிறார்கள். அதனால் குறைவான ஓட்டுக்கள் பெற்ற எதிர்க்கட்சியினரின் நியாயமான கோரிக்கை கூட ஆட்சியாளர்கள் ஏற்பதில்லை. எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினர் விஷயத்தில் என்ன நல்லது நடந்தாலும் மறுத்து பேசுவதோடு குற்றம், குறை சொல்வதில் குறியாக உள்ளனர். இந்நிலை மாறவேண்டும். தனிமனிதக் கவர்ச்சி, கட்சிக்கு மயங்காமல் யார் நல்லவர், யார் நாணயமானவர் என தேர்தலில் தேர்வு செய்யும் நிலை வர வேண்டும்'' என்றார் காஞ்சி மகா சுவாமிகள்.தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.comதிருப்பூர் கிருஷ்ணன்உபதேசங்கள்* நாடு நலம் பெற பசுக்களைக் காப்போம்.* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற...இந்த ஸ்லோகத்தை தினமும் படித்தால் உடல் நலத்துடன் வாழலாம் என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்தமயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!