எல்லாம் ஒழுங்காக நடக்க...
UPDATED : ஜூன் 12, 2016 | ADDED : ஜூன் 12, 2016
* பொறுப்பு அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து அவரின் திருவடியைச் சரணடையுங்கள். வாழ்வில் எல்லாம் ஒழுங்காக நடக்கும்.* கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது. ஆணவம் என்பதே இல்லாத மனத்துாய்மை ஒன்றையே அவர் விரும்புகிறார்.* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் கடவுளைச் சிந்தித்திருப்பவனின் வாழ்வில் சுமை என்பது சிறிதும் இருக்காது.* நல்லவர்களின் நட்பைத் தேடிச் செல்லுங்கள். இதனால் மனதிலுள்ள அறியாமை நீங்கி விடும்.- ரமணர்