துணிவுடன் கடமையாற்று!
UPDATED : ஜூன் 21, 2016 | ADDED : ஜூன் 21, 2016
* பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. விளைவைப் பற்றி சிந்திக்காமல் துணிவுடன் கடமையாற்றுங்கள்.* உடல் ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு அடிப்படையானவை.* பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை.* பயனுள்ள பொழுதுபோக்கில் ஆர்வமுடன் ஈடுபட்டால் மனதிலும், உடம்பிலும் புத்துணர்ச்சி உண்டாகும்.- சிவானந்தர்