நேசித்து வாழ்வோம்
UPDATED : டிச 06, 2015 | ADDED : டிச 06, 2015
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். சுயநலமின்றி பிறரை நேசியுங்கள்.* பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவுங்கள். நேர்மையான வழியில் உழைத்துப் பொருள் தேடுங்கள்.* உண்ணும் முன் ஒருநிமிடம் கடவுளைப் பிரார்த்தனை செய்வதன் மூலம் உணவு புனிதம் அடைகிறது.* வாரம் ஒருமுறை விரதம் மேற்கொள்ளுங்கள். முடியாவிட்டால் பால், பழம் மட்டும் சாப்பிடுங்கள்.* அன்றாடம் சிறிது நேரமாவது நடைப்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்.சிவானந்தர்