உள்ளூர் செய்திகள்

பலத்த வரவேற்பு

நபிகள் நாயகம் தங்கள் ஊருக்கு வருகிறார் என அறிந்ததும் மெதீனாவில் வாழ்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் வந்ததும் தங்கள் இல்லங்களில் தங்க வேண்டும் என அனைவரும் அன்பு கோரிக்கைகளை செலுத்தினர். இதனால் அவரும் எல்லோரது மனம் வருந்தக் கூடாது எனக்கருதி, ஓர் ஒட்டகத்தின் கழுத்தில் கயிற்றைப் போட்டார். பின் அதைத் தன்னிச்சையாகப் போக விட்டு, 'அது எங்கே போய் நிற்குமோ, அதுவே நான் தங்கும் இடமாகும்' என்றார். அதன்படி அபூ அய்யூப் என்பவர் வீட்டின் முன்னே போய் நின்றது ஒட்டகம். அபூ அய்யூப் அளவற்ற மகிழ்ச்சியோடு, அவர் கொண்டு வந்த பொருட்களை எடுத்து வீட்டிற்குள் வைத்தார். பின் பணிவோடு வரவேற்று உபசரித்து தன்வீட்டின் மாடியில் தங்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவரோ பலரும் தன்னை வந்து காண்பதற்கு வசதியாக கீழ்த்தளத்தில் தங்கினார். பின்னர் ஸைதையும், அபூக்கரின் மகன் அப்துல்லாஹ்வையும் மெக்காவுக்கு அனுப்பி, தன் குடும்பத்தினரை அழைத்து வருமாறு செய்தார் நாயகம்.