நன்றி
UPDATED : அக் 17, 2024 | ADDED : அக் 17, 2024
ஒருநாள் மெதீனாவில் பார்க்கும் திறன் இல்லாத தொழுநோயாளி ஒருவர் நடந்து சென்றார். அவரைப் பார்த்த உமர் பரூக் என்பவர் அருகில் நின்ற தோழரிடம், ''இவர் மீது இறைவனின் கருணை உள்ளதா'' எனக் கேட்டார். அதற்கு தோழர், ''ஏன் அப்படி கேட்கிறீர்கள்'' எனக் கேட்டார். ''பார்க்கும் திறன் இல்லை. தொழுநோயால் அவதிப்படுகிறார். இவருக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது'' எனச் சந்தேகமுடன் கேட்டார். ''தங்களின் எண்ணம் தவறு. எல்லோருக்கும் நிறை, குறை இருக்கும். இவருக்கு கை, கால்கள் நன்றாக இருக்கிறதே. இதற்காகவே அவர் நன்றி உணர்வுடன் செயல்பட வேண்டும்'' என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.