உள்ளூர் செய்திகள்

அவன் கையில்

ஒரு சமயம் செல்வந்தர், அறிவாளி ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டது. செல்வந்தர், ''உலகில் பணம் இருந்தால்தான் எதையும் செய்ய முடியும். நான் சொன்னால் அனைவரும் கேட்பார்கள்'' என்றார். இதற்கு அறிவாளியோ, ''நான் நினைத்தால் உன்னை விட பணக்காரன் ஆவேன். என்னிடம் அறிவுள்ளது'' என கர்வமாக பேசினார். இதையெல்லாம் கேட்ட பெரியவர் ஒருவர், ''நாளை இருப்போமா... இல்லையா என்பது நம் கையில் இல்லை. இறைவன் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் பணக்காரனாகவும், அறிவாளியாகவும் மாற்றுவான். எல்லாம் அவன் கையில் உள்ளது'' என்றார்.