இது சத்தியம்
UPDATED : மார் 07, 2025 | ADDED : மார் 07, 2025
ஒருமுறை ஹஜ்ரத் நுாஹ்ஹிடம் மண்ணை பிசைந்து கொண்டு கூஜா, குவளை, குடம் போன்ற பாத்திரங்களை தயாரிக்கச் சொன்னான் இறைவன். அவரும் பல நாட்கள் சிரமப்பட்டு அவற்றை தயாரித்தார். பின் அவற்றை சுக்குநுாறாக உடைக்கும்படி கட்டளையிட்டான். அதற்கு நுாஹ், 'இதை என் கைகளால் சிரமப்பட்டு செய்துள்ளேன். இதை எப்படி உடைப்பேன்' என வருந்தினார். ''உயிரற்ற பொருட்களை தயாரித்து, உடைப்பதற்கே இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள். அப்படி இருக்கும்போது நான் படைத்த மனிதனை நானே அழித்ததற்கு எப்படி சகித்திருப்பேன். என் ஆற்றல் மீது சத்தியம் செய்கிறேன். இனி யாரையும் இப்படி ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி அழிக்க மாட்டேன்'' என்றான். இதைக் கேட்ட நுாஹ் நிலைகுலைந்தார்.