நான்கு ரொட்டிகள்
UPDATED : மே 30, 2025 | ADDED : மே 30, 2025
எளிமை, நேர்மை, இறை நம்பிக்கை போன்ற நற்குணங்கள் கொண்ட ஆட்சியாளர் உமர் இப்னு அப்துல் அஸீஸ். தன்னைப் போல நண்பர்களும் எளிமையாக வாழ வேண்டும் என கருதினார். ஒருநாள் மதிய உணவுக்காக நண்பர்களை எல்லாம் அழைத்தார். அவர்களும் விருந்துணவாக இருக்கும் எனக் கருதி மகிழ்ச்சியுடன் வந்தனர். பேசிக் கொண்டே பொழுதைக் கழித்தார் உமர். ஆனால் உணவு ஏதும் அளிக்கவில்லை. நேரம் கடந்ததால் அனைவருக்கும் பசி ஏற்பட்டது. அதன்பின் ஆளுக்கு நான்கு ரொட்டித் துண்டுகள் தரப்பட்டன. 'பசி ருசி அறியாது' என்பதால் வேகமாக வாங்கிச் சாப்பிட்டனர். ''ஆடம்பரமாக மனிதன் வாழக் கூடாது. இல்லாவிட்டால் நரகம் செல்ல நேரிடும். பசிக்கும் போது எளிய ரொட்டித் துண்டும் சுவையாக இருக்கும். அதை உணர்த்தவே இப்படி செய்தேன்'' என அறிவுரை கூறினார்.