உள்ளூர் செய்திகள்

அழுதேன்... சிரித்தேன்

நபிகள் நாயகம் மரணப் படுக்கையில் இருந்தார். அப்போது தன் மகள் பாத்திமாவை அழைத்து மெதுவாக பேசினார் அதைக் கேட்ட பாத்திமா அழுதார். பின் மீண்டும் ஏதோ சொல்ல சிரித்தார். இதைப் பார்த்த ஆயிஷா, ''அவர் என்ன சொன்னார்'' எனக் கேட்டார். அதற்கு நாயகம் சொன்னதை அப்படியே கூறினார் பாத்திமா. 'வானவரான ஜிப்ரீல் ஒவ்வொரு ஆண்டும் எனக்கு ஓரிரு முறை குர்ஆனை ஓதிக் காட்டுவார். ஆனால் இந்த முறை இரண்டு தடவை ஓதிக் காட்டினார். இதில் இருந்து இறப்பு நெருங்கி விட்டதாக கருதுகிறேன். உனக்கு முன்பு நான் நல்லபடியாக உலகை விட்டு சென்று விடுவேன்' என்றார்.ஆகவே தான் உங்கள் முன்னிலையில் நான் அழுதேன். எனது பதற்றத்தைக் கண்டு, 'பாத்திமா... இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீ தலைவியாக இருக்க விரும்பவில்லையா' எனக் கேட்டதும் சிரிப்பு வந்தது'' என்றார்.