கேலி செய்யாதே
UPDATED : ஜூன் 20, 2025 | ADDED : ஜூன் 20, 2025
ஒருவரின் உருவத்தை பார்த்து கேலியாக பேசினார் ஆயிஷா. இதையறிந்த நாயகம், ''அவரைப் பற்றி நீ கூறிய வார்த்தை பொல்லாதது. அதை கடலில் விட்டால் அதுவும் கூட கலங்கி விடும்'' என கோபப்பட்டார். பிறரை பற்றி கேலி பேசக் கூடாது. உலகில் நிறைவானவர் என ஒருவரும் இல்லை. மற்றவர் குறைகளை தேடுபவனின் குறைகளை இறைவன் கவனிக்கிறான். தக்க சமயம் பார்த்து அவனை கேவலப்படுத்துவான். குறை சொல்பவரின் குறைகளை பட்டியல் இட தொடங்கினால் எண்ணிக்கைக்கு அடங்காது. பிறரிடம் குறை இருந்தாலும் அதை பொறுத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் உங்களின் குறைகளை அவன் மன்னிப்பான்.