பாவமன்னிப்பு
UPDATED : ஜூன் 20, 2025 | ADDED : ஜூன் 20, 2025
ஒருவர் பாலை வனத்தில் பயணம் செய்தார். களைப்பாக இருந்ததால் ஓரிடத்தில் துாங்கினார். உணவும் நீரும் அவரது வாகனமான ஒட்டகத்தில் இருந்தது. துாங்கி எழுந்த போது ஒட்டகத்தை காணவில்லை. அதைத் தேடி அலைந்ததில் தாகம் ஏற்பட்டது. விரக்தி அடைந்த அவர், முன்பு இருந்த இடத்திற்கே சென்றார். களைப்பால் துாங்கி விட்டார். திடீரென விழித்த போது ஒட்டகம் அருகில் நிற்பதைக் கண்டார். ஒட்டகம் கிடைத்த நேரத்தில் அவர் மனம் எப்படி மகிழ்ந்திருக்கும். அதை விட இறைவன் மகிழ்வான். எப்போது தெரியுமா? இறை நம்பிக்கையுள்ள ஒருவர் மனம் திருந்தி பாவமன்னிப்பு கேட்கும்போது.