சாமர்த்தியம்
UPDATED : ஜூலை 03, 2025 | ADDED : ஜூலை 03, 2025
ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ஆட்டுக்குட்டியை அழைத்து, ''என் வாய் நாறுகிறதா என பார்த்துச்சொல்'' என்றது. ஆடு முகர்ந்து பார்த்து, ''ஆமாம்'' என்றது. உடனே சிங்கம், ''உனக்கு எவ்வளவு திமிர். என் வாய் நாறுகிறது என்கிறாயா...''என அதன் மீது பாய்ந்து கொன்று உணவாக்கியது. அடுத்து ஒரு ஓநாயை அழைத்து அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. ஆனால் அதுவோ ''கொஞ்சம் நாறவில்லை'' என்றது.''பொய் சொல்றியே'' எனக்கூறி அதையும் சாப்பிட்டது. அதற்கு இன்னும் பசி அடங்கவில்லை. அந்நேரம் பார்த்து நரி ஒன்று செல்ல, அதனிடம் அதே கேள்வியை கேட்டது. ஆனால் நரியோ தந்திரமாக, 'எனக்கு ஜலதோஷம்' என சொல்லி ஓடிவிட்டது. சாமர்த்தியமாக செயல்பட்டால் ஆபத்திலும் தப்பிக்கலாம்.