உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சி

நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர், ''நோன்பில் இருக்கும் போது தவறு செய்து விட்டேன்'' என வருந்தினார். ''தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு வைக்க முடியுமா'' ''முடியாது'' ''உம்மிடம் இருக்கும் அடிமையை விடுவிக்க முடியுமா'' ''அடிமை யாரும் இல்லை'' ''ஏழைகளுக்கு உணவு தர முடியுமா'' ''அந்த அளவிற்கு என்னிடம் வசதி இல்லை'' தோழர்களின் மூலம் பேரீச்சம் பழம் கூடை ஒன்றை வரவழைத்து, ''இதை ஏழைகளுக்கு கொடுங்கள்'' ''மெதீனாவில் உள்ள மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தை விட ஏழை யாருமில்லை'' என்றார் அவர். சிரித்தபடி, ''அப்படியானால் உம் குடும்பத்தினருக்கே இதைக் கொடுங்கள்'' என்றார். கிடைத்ததை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் அவர்.