உள்ளூர் செய்திகள்

வெற்றியாளராக...

கழுகு ஒன்று தன் முட்டையை காகம் வசிக்கும் கூட்டில் இட்டுச் சென்றது. காகம் தன் குஞ்சுகளோடு சேர்த்து கழுகுக்குஞ்சையும் வளர்த்தது. காகக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகுக்குஞ்சுக்கு உயரப்பறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் பறக்கமுடியவில்லையே என வருத்தப்பட்டது. வானத்தில் தன்னைப்போலவே உள்ள பறவை ஒருநாள் பறப்பதை பார்த்தது. அதன் நினைவில் சூழ்நிலையால் தவறான இடத்தில் வளர்ந்து வருகிறோம் என நினைத்தது. அதற்காக முயற்சித்த கழுகுக்குஞ்சு மேகங்களுக்கிடையே பறக்க ஆரம்பித்தது. உங்களிடம் உள்ள திறமையை நீங்கள் தான் வெளியில் கொண்டு வர வேண்டும். அப்படி வந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்.