கருமித்தனம் மறைய...
UPDATED : செப் 16, 2022 | ADDED : செப் 16, 2022
ஒரு கிராமத்தில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் கருமித்தனம் உடையவர். அவருடைய மகளுக்கு திடீர் என உடல்நிலை சரியில்லாமல் போனது. அவளை பார்க்க உறவினர்கள் எல்லோரும் வந்து ஆறுதல் கூறிச்சென்றனர். அவர்களில் ஒருவர் உனது மகள் குணமாவதற்கு இரு வழி உள்ளன. ஒன்று தினமும் குரானை படிக்க வேண்டும். மற்றொன்று ஒரு ஆட்டினை வாங்கி இறைவனுக்கு பலி கொடுக்க வேண்டும் இதில் எதனைச்செய்தாலும் அவள் குணமாவாள் என்றார். ஆடு வாங்க பணம் செலவாகும் என நினைத்த கருமி குரானை படிக்க ஆரம்பித்தார். நாளடைவில் அவரது மகளும் குணமானாள். அவரிடமிருந்து கருமித்தனமும் மறைந்தது.