வேண்டாமே அலட்சியம்
UPDATED : டிச 11, 2022 | ADDED : டிச 11, 2022
ஒய்வு பெற விரும்புவதை தனது முதலாளியிடம் தெரிவித்தார் மேஸ்திரி ஒருவர். அதற்கு முன் ஒரு வீடு கட்டித்தாருங்கள் என கேட்டுக் கொண்டார் முதலாளி. நாம் தான் ஓய்வு பெறப் போகிறோமே என்ற நினைப்பில், தரம் குறைந்த பொருட்களைக் கொண்டு வீட்டைக் கட்டினார். ''உங்கள் உழைப்பிற்கு என் அன்பு பரிசாக இந்த வீட்டினை தாங்களே வைத்துக் கொள்ளுங்கள்'' என சாவியைக் கொடுத்தார் முதலாளி. தன் தவறை உணர்ந்த மேஸ்திரி தலை சுற்றி கீழே விழுந்தார்.