உள்ளூர் செய்திகள்

பிறர் குற்றம் காணாதே

தோழரும், அவரது மகனும் பக்கத்து ஊருக்கு பயணமானார்கள். இரவான படியால் ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினர். அங்கு சிலர் உறங்கிக்கொண்டிருப்பதை இருவரும் பார்த்தனர். அதிகாலையில் எழுந்து தொழுகைக்கு தயாரானார் தோழர். அப்போது ''தந்தையே இவர்கள் இன்னும் தொழுகைக்கு தயார் ஆகாமல் உள்ளார்களே'' எனச் சொன்னான். அதற்கு அவரோ! பிறரின் குற்றத்தை பெரிதுபடுத்தி பேசுபவர் இறைவனுடைய அன்புக்கு உரியவராக மாட்டார் என்பதை நாயகம் உபதேசித்தாரே அதை மறந்து விட்டாயா'' என்றார். ஆம், தந்தையே! இனிமேல் இவ்வாறு பேச மாட்டேன் என மறுமொழி கூறி தொழுகை செய்ய ஆரம்பித்தார்.