பொய் பேசாதீர்கள்
UPDATED : பிப் 19, 2023 | ADDED : பிப் 19, 2023
நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது அங்கு வந்தவர், ''நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். இதனால் திருடுகிறேன். பொய் சொல்கிறேன். இதில் ஏதாவது ஒரு பழக்கத்தை விடலாம் என நினைக்கிறேன். இதில் எதை முதலில் விடலாம்'' எனக் கேட்டார். “பொய் பேசுவதை விட்டு விடு” என்றார். இதைக்கேட்டவர், 'இது எளிமையான விஷயம்தானே' என மகிழ்ச்சியுடன் கிளம்பினார். அன்றிரவே குடிக்கும் எண்ணம் வந்தது. ஆனால் 'குடித்துவிட்டு பொய்சொல்ல முடியாதே' என பயந்தார். 'தவறு செய்தால்தானே பொய் சொல்ல நேரிடும். இல்லாவிட்டால் உண்மை பேசலாமே' என எண்ணி துாங்கிவிட்டார். பொய்தான் பாவங்கள் அனைத்திற்கும் ஆணிவேராக உள்ளது. அதை தவிர்த்தாலே போதும்.