உள்ளூர் செய்திகள்

ஊக்கப்படுத்துங்கள்

அந்த கிராமத்தில் இரும்புபொருட்களை விற்பனை செய்யும் கடை பிரபலம். காலப்போக்கில் அவ்வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வியாபாரி வருந்தினார். இதைக் கவனித்த அவருடைய மனைவி ''முதலில் கவலைப்படாதீர்கள். மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து வியாபாரம் செய்யலாம்'' என யோசனை சொன்னாள்.அதன்படியே அருகில் இருந்த காட்டிற்கு சென்று விறகுகள் வெட்டி விற்பனை செய்தார் அவர். நாளுக்கு நாள் வியாபாரம் நல்ல நிலைக்கு முன்னேறியது. ஒருநாள் நெருப்பு பட்டு அவர் வைத்திருந்த விறகுகள் தீக்கிரையாயின. அதற்காக மிகுந்த கவலை அடைந்த அவரிடம் ''எரிந்த விறகின் கரிதுண்டுகளை வைத்து வியாபாரம் செய்யலாம்'' என அவருக்கு மீண்டும் யோசனையூட்டினாள் அவரது மனைவி. சாதிக்க முயற்சிப்போரை ஊக்கப்படுத்துங்கள். நிச்சயம் வெற்றி அடைவார்.