உள்ளூர் செய்திகள்

எல்லோருக்கும் பயன்பட வேண்டும்

சீடர்களை பார்த்த ஞானி ''தெரிந்த தர்மங்களை பிறருக்கு சொல்லித் தரக்கூடாது என நினைத்தால் அது பாவம்'' எனக் கூறினார். அவர்களுள் ஒருவர், ''எனக்கு புரிய வில்லை'' என குரல் எழுப்பினார். அவருக்கு விளக்க முயற்சித்தார் ஞானி. ஒருவர் ஆற்றைக்கடக்க புதியதாக படகு ஒன்றைச் செய்து அதில் பயணமாகி அக்கரையை அடைவார். அவர் செய்த படகு தான் என்றாலும் அதனை வீட்டிற்கு அவர் எடுத்துச்செல்வதில்லை. மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அதனை ஆற்றின் கரையில் விட்டு விடுவார். தேவையானவர்கள் படகை பயன்படுத்தி ஆற்றைக்கடப்பர். அது போலத்தான் தெரிந்த தர்மமும் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்றார். ஞானியை பார்த்து சீடர்கள் புன்னகைத்தார்கள்.