நல்லாட்சி
மக்கள் தனது ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்ள ஆசை பட்டார் மன்னர். மந்திரியை அழைத்துக் கொண்டு மாறுவேடத்தில் முக்கிய வீதி வழியாக சென்றனர். அப்போது ஒரு பெரியவரிடம் ''மன்னர் இறந்து விட்டார் தெரியுமா'' எனச் சொன்னார் அமைச்சர். ''நல்லாட்சி புரிந்தவர். புண்ணியவான் போய்விட்டார்''என புலம்பி அனுதாபப்பட்டுச் சென்றார் அவர். அங்கிருந்து இதைக் கேட்ட தயிர் விற்கும் சிறுமி அரண்மனையில் மன்னருக்கு அஞ்சலி செலுத்த அதிகமான மக்கள் வருவார்கள். அங்கு நிறைய தயிர் விற்பனையாகும் என சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.மன்னருக்கோ குழப்பம். ''யார் சொல்லுவதை நம்புவது''என மந்திரியிடம் கேட்டார். அவரோ! மன்னா அவரவர் பக்குவத்திற்கு தகுந்தாற்போல பேசுகிறார்கள். உங்கள் மனம் என்ன சொல்லுகிறதோ அதுவே உண்மை தாங்கள் நல்லாட்சி தான் செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என உணர்த்தினார் அமைச்சர்.