உயர்ந்த உள்ளம்
UPDATED : டிச 11, 2022 | ADDED : டிச 11, 2022
துருக்கியை ஆண்ட மன்னருக்கு சேவை செய்யும் வேலையாட்களில் முக்கியமானவர் பாரூக். அவரது சேவையால் மன்னர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். மன்னர் துாங்குவதற்காக விசிறி வீசிக் கொண்டிருந்த அவரும் அப்படியே துாங்கிவிட்டார். நடுநிசி வேளையில் சேவகனுக்கு வியர்வை கொட்டியது. விழித்துப் பார்த்த மன்னர் விசிறியால் சேவகருக்கு விசிற ஆரம்பித்தார். கண்விழித்த சேவகர் பதறவே, அவரிடம் '' தக்கசமயத்தில் ஒருவருக்கு தேவையான உதவியை செய்பவர் இறைவனுக்கு விருப்பமானவர்'' என்பது நபிகள் நாயகத்தின் பொன்மொழி என்றார். மன்னரின் உயர்ந்த உள்ளத்தில் நாமும் இருக்கிறோம் என்பதை உணர்ந்தார் சேவகர்.