உள்ளூர் செய்திகள்

சிக்கனமாயிருந்தால்...

தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து தனிக்குடித்தனம் வைத்தார் பணக்காரத்தந்தை. அவனது வருமானத்திற்கு வழியையும் ஏற்படுத்தினார். பத்து நாட்களுக்கு ஒரு முறை அவனைப் பார்த்து வருவது வழக்கம். ஒரு நாள் அவரிடம் ''உங்களுடைய உதவி இருந்தும், குடும்பத்தை கொண்டு செல்வது கஷ்டமாகவே இருக்கிறது அதை சரி செய்ய என்ன வழி'' எனக் கேட்டான் மகன். அதற்கு அவரோ, '' வாழ்க்கையில் எதுவும் சுலபம் அல்ல! எல்லா வற்றிலும் அதிக விழிப்புணர்வு தேவை. ஒவ்வொன்றையும் அத்தியாவசியமா என பார்த்து பார்த்து தான் செய்ய வேண்டும். வீண் செலவு கூடாது. வீட்டில் நாம் இருவர் தான் இருக்கிறோம். வெளிச்சத்திற்கு ஒரு பல்பு போதுமே. மற்றொன்றை ஏன் எரிய விட வேண்டும்” எனக் சொன்னார். உடனே தேவை இல்லாமல் எரிந்து கொண்டிருந்த மற்றொரு பல்பை அணைத்தான் மகன். தந்தை எப்படி பணக்காரர் ஆனார் என்பதையும் புரிந்து கொண்டான்.