உள்ளூர் செய்திகள்

பேச நினைத்தால்...

எப்படி பேச வேண்டும் என ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு மாணவன் எழுந்து, ''எனக்கு புரியவில்லை விளக்கமாக கூறுங்கள்'' என்றான். அதற்கு ஆசிரியர், ''உங்கள் வாய்க்குள் காவலர் ஒருவர் இருப்பதாக நினைத்து கொண்டு கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். நடத்திய பாடம் புரியும்'' என்றார். மாணவர்கள், ''என்ன கேள்வியை காவலர் கேட்பார்'' என கேட்டனர். ''நீ பேசுவது உண்மையா, அது இனிமைதானா, இவ்வார்த்தைகளால் நன்மை விளையுமா என்கிற கேள்விகளை காவலர் கேட்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். பேச்சின் மதிப்பு தெரியும்'' என்றார் ஆசிரியர்.