உள்ளூர் செய்திகள்

அறிவுக்கூர்மை

நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தார் பாதுஷா. மற்ற அமைச்சர்கள் அவர் மீது பொறாமை பட்டனர். அவரைப்பற்றி மன்னரிடம் புகார் கூறினர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் மன்னர். அவர்களுக்கு அவருடைய திறமையை எடுத்துச்சொல்ல சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அரண்மனைக்கு வியாபாரி ஒருவர் ஒரே மாதிரியான மூன்று பொம்மைகளை கொண்டு வந்தார். இதில் ஒவ்வொன்றும் சிறப்பானது ஆனால் ஒரு பொம்மை மட்டுமே தனிச்சிறப்புடையது அது என்ன என்று கூறுங்கள் பார்ப்போம் என்றார். அமைச்சர்களை கண்டு பிடிக்கச் சொன்னார். பொம்மைகளை திரும்பத் திரும்ப பார்த்த அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டனர்.சிறிது நேரம் கழித்து வந்த பாதுஷாவிடம் விபரத்தை சொன்னார் மன்னர். அவரும் பொம்மைகளை சிறிது நேரம் உற்று நோக்கினார். கம்பி ஒன்றை கொண்டு வரச் செய்து அதனை ஒவ்வொரு பொம்மையின் காது வழியாக விட்டார். கம்பி ஒவ்வொரு பொம்மையின் வாய், காது வழியாக வந்தது. வயிற்றுக்குள்ளும் சென்றது. மன்னா, '' முதல் பொம்மை ஒருவர் கூறும் செய்திகளை ஊர் முழுக்க டமாரம் அடித்து விடும். இரண்டாவது பொம்மை காதில் வாங்கும் செய்திகளை மற்றொரு காது வழியாக விட்டுவிடும். கடைசி பொம்மையே சிறந்தது. தான் கேட்ட செய்திகளை உள்வாங்கி கொள்ளும்'' என்ற அறிவுரையை உணர்த்தும் என்றார். விளக்கத்தை கேட்ட மன்னர் மகிழ்ந்தார். பொறாமை கொண்ட அமைச்சர்கள் தலை குனிந்தனர்.