உள்ளூர் செய்திகள்

தூறல் வந்தாச்சு

கிராமத்திற்கு வந்த ஞானி ஒருவரிடம், ''ஐயா... எங்கள் ஊரில் நீண்ட காலமாக மழை பெய்யவில்லை. தாங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்'' என முறையிட்டனர். ''நம்பிக்கையுடன் நாளை மாலை இங்குள்ள மைதானத்திற்கு வாருங்கள். இறைவன் அருளால் மழை பெய்யும்'' என்றார். மறுநாள் ஊரார் வந்த போது, ''அனைவரும் ஐந்து நிமிடம் கண்களை மூடி மழைக்காக பிரார்த்திப்போம்'' என்றார். அப்போது அவர்களிடம் ''இன்று மழை வரும் என்ற நம்பிக்கை இருந்திருந்தால் குடையுடன் வந்திருப்பீர்கள். இதோ... என்னிடம் குடை உள்ளது. மழை வேண்டும் என்ற எண்ணம் உதட்டளவில் மட்டுமே இருந்தால் போதாது. உள்ளத்திலும் இருக்க வேண்டும்'' என்றார் ஞானி. தவறை உணர்ந்த மக்கள் கண்ணீர் சிந்தினர். அப்போது துாறல் விழுந்தது.