உள்ளூர் செய்திகள்

உழைப்பே உயர்வு

இளைஞர் ஒருவர் தனது குடும்ப வறுமையை சொல்லி நாயகத்திடம் வந்து நின்றார்.அவரைப்பார்த்து ''உன்னுடைய வீட்டில் ஏதேனும் பொருள் இருக்கிறதா'' எனக்கேட்டார். அதற்கு ''அவர் ஒரே ஒரு போர்வை உள்ளது'' என்றார் இளைஞர். அதனைக் கொண்டு வரச்செய்து ஏலம் விட்டார். அதில் வந்த பணத்தைக்கொண்டு கோடாரி ஒன்றை வாங்கிக்கொடுத்தார். விறகு வெட்டி பிழைத்துக்கொள்! உழைத்து வாழ்வது சிறந்தது என்றார். சில நாட்கள் கழித்து நாயகத்தை பார்த்த இளைஞர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். உழைத்து வாழும் இளைஞரை வாழ்த்தினார்.