கொடியவனிடம் இரக்கமா
UPDATED : நவ 28, 2022 | ADDED : நவ 28, 2022
குளத்தின் கரை அருகில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது அதில் இருந்து வந்த முதலை ஒரு குட்டியை ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. குட்டியை சாப்பிட்ட முதலை கரையின் மேல் வந்து கண்ணீர் வடித்தது. இதனை எல்லாம் கவனித்த கொக்கு அதனிடம் சென்று ஏன் அழுகிறாய். குட்டியை கொன்று விட்டோம் என வருந்துகிறாயா எனக் கேட்டது. அதற்கு முதலை ''அதனுடன் சேர்ந்த மற்றொரு குட்டி தப்பித்து விட்டதே'' என்பது தான் வருத்தம் என்றது. கொடியவனிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியுமா என நினைத்துக்கொண்டே பறந்தது கொக்கு.