ஓடைக் கரையினிலே... மறுமை நாளில்
UPDATED : ஜூலை 12, 2024 | ADDED : ஜூலை 12, 2024
இறைவன் முன்பு விசாரிக்கப்பட்டதும் அவரவர் செய்த செயலுக்கு ஏற்ப சொர்க்கம், நரகத்திற்கு மனிதர்கள் அனுப்பப்படுவர். நரகத்திற்குள் சென்ற பின், 'யார் ஒருவரின் மனதில் கடுகு அளவேனும் இறை நம்பிக்கை (ஈமான்) இருக்கிறதோ அவர்கள் எல்லாம் இங்கிருந்து வெளியேறுங்கள்' எனக் கட்டளை பிறப்பிக்கப்படும். வெளியேறியதும் மழைநதி (நஹ்ருல் ஹயா), ஜீவநதி (நஹ்ருல் ஹயாத்) இரண்டிலும் நீராடுவர். இது பற்றி, 'நதியில் மூழ்கியவர்கள் ஓடைக் கரையில் விதைத்த பயிர் போல புத்துணர்ச்சி பெறுவர். மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில் அசைந்தாடும் பயிர் போலவும் இருப்பார்கள்'' என்கிறது குர்ஆன்.