உள்ளூர் செய்திகள்

எதிரியை மன்னித்து விடு

ஒருபோரின் போது ஓய்வெடுப்பதற்காக மர நிழலில் ஒதுங்கினார் நாயகம். எதிரியொருவன் வாளை எடுத்து அவரின் முகத்திற்கு நேராக காண்பித்து இப்போது உம்மை காப்பாற்றுபவர் யார் எனக்கேட்டான். அதற்கு அவரோ ''இறைவன்'' எனப்பதில் அளித்தார். அதைக்கேட்ட அவன் வாளைக்கீழே போட்டான். பின்னர், அதனை எடுத்த நாயகம் அவர் செய்ததைப் போலச்செய்து ''உம்மை காப்பாற்றுபவர் யார்'' எனக்கேட்டார். அதற்கு ''நீங்கள் தான்'' எனப்பதில் அளித்தார் எதிரி. ''உன்னை என்னையும் காப்பற்றக்கூடியவர் அவன் ஒருவன் தான். வேறு யாருமில்லை'' எனக்கூறி எதிரியை மன்னித்து அனுப்பினார்.