உள்ளூர் செய்திகள்

உழைப்பின் பெருமை

ஒரு ஊரில் அழகான இளைஞர் ஒருவர் இருந்தார். அவரை மணக்க நான் நீ என பல பெண்கள் போட்டி போட்டனர். இவர்களில் யாரைத்தேர்ந்தெடுப்பது என யோசனையில் ஆழ்ந்த அவருக்கு நல்லவழி ஒன்று தோன்றியது. பிச்சைக்கார வேடமணிந்து முதலில் ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்றார். '' உணவு கொடுங்கள்'' எனக்கேட்க அவளும் கொடுத்தாள். மற்றொரு வீட்டிலும் அதேபோல் கேட்க ''பெற்றோர் இல்லை சிறிது நேரம் கழித்து வா'' என பதில் வந்தது. மூன்றாவதாக ஒரு வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த பெண் ''உழைத்து பிழைக்க கூடாதா'' என விரட்டினாள்.பதிலை கேட்ட அவர், மணந்தால் இவளையே மணப்பேன் என முடிவு செய்தார்.