பயம் கூடாது
UPDATED : ஜன 12, 2023 | ADDED : ஜன 12, 2023
பயந்த சுபாவம் உடைய மகனுக்கு நீச்சல் கற்றுத்தர ஆற்றிற்கு அழைத்துச் சென்றார் தந்தை. அப்போது நாய் ஒன்று தண்ணீர் குடிக்க வந்தது. தனது பிம்பத்தை பார்த்து அது பயந்தது. சிறிது நேரத்தில் ஆற்றில் குதித்து அக்கரையை அடைந்தது. பின் தண்ணீரை குடித்து விட்டு சென்றது. கற்றுக்கொள்ள பயம் கூடாது. பயமிருந்தால் அதில் தாமதம் ஏற்படும் என மகனிடம் நாயின் செயலைக் காட்டி அறிவுரை கூறினார் தந்தை. உடனே நீச்சல் கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் தயாரானன்.