உள்ளூர் செய்திகள்

சேர்க்கையின் வலிமை

''நல்லவர்களுடன் தீயவர் சேர்ந்தால் நல்லவராக மாறுவர். அதே நேரத்தில் தீயவர்களுடன் நல்லவர் சேர்ந்தால் தீயவராவர்'' என்றார் ஆசிரியர்.புரியவில்லை என்றனர் மாணவர்கள்.ஒருகுடத்தில் பாலும், மற்றொரு குடத்தில் தண்ணீரும் உள்ளது. ஒரு செம்பு தண்ணீரை பால்குடத்தில் ஊற்றினால் அதுவும் பாலாகும்.அதேபோல் தண்ணீர் குடத்தில் ஒரு செம்பு பாலை ஊற்றினால் அதுவும் தண்ணீராகும். சேர்க்கையின் வலிமை இப்போது புரிகிறதா எனக்கேட்டார். மாணவர்கள் அனைவரும் ''ஆமாம்'' என்றனர்.