சுவர்க்கத்து பெண்களின் தலைவி
UPDATED : செப் 29, 2023 | ADDED : செப் 29, 2023
நபிகள் நாயகத்திற்கு மொத்தம் 11 மனைவிகள் இருந்தனர். இவருக்கு 4 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பிறந்தன. இதில் ஆண் குழந்தைகள் மூவரும் குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்துவிட்டனர். பெண் குழந்தைகளில் நான்காவதாக பிறந்தவர்தான் ஹஜ்ரத் பாத்திமா. இவர்மீது நாயகம் மிகுந்த பாசம் வைத்திருந்தார். இதனால் இவர் 'சுவர்க்கத்து பெண்களின் தலைவி' என கவுரவிக்கப்படுகிறார். பின் இவருக்கு பிறந்த குழந்தைகளான ஹஜ்ரத் ஹசன், ஹஜ்ரத் ஹுஸைன் ஆகியோரைக் கொண்டு இவரது வழித்தோன்றல்கள் வந்துள்ளனர்.