உள்ளூர் செய்திகள்

முதல் தொழுகை

மெதீனாவுக்கு அருகில் இருந்த குபா என்னும் ஊரில் நபிகள் நாயகமும், அபூபக்கர் என்பவரும் வந்தனர். அங்கே இருந்த அன்சாரிகள் (மெதீனாவாசிகள்) அவர்களை அன்போடு வரவேற்று உபசரித்தனர். அப்போது நாயகம் குபாவில் முதலாவதாக ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மற்றவர்கள் கட்டட வேலை செய்வதைப் போல அவரும் வேலைகளை செய்தார். பிறர் தடுத்தும் கட்டட வேலையில் அவர் ஈடுபட்டார். கட்டட வேலை செய்தவர்களுள், அரபிக் கவிஞர் ஒருவரும் இருந்தார். வேலை செய்யும் சிரமம் தெரியாமல் இருக்கும் பொருட்டு, அந்தக் கவிஞர் பாடுவார். அவருடன் சேர்ந்து நாயகமும் பாடுவார். இப்படியே நாட்கள் சென்றது. ஒருநாள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் புறப்பட்டு பனுா ஸலீமுப்னு அவ்பு இடத்துக்கு வந்தார். ஜூம்ஆத் தொழுகை நேரம் வந்துவிட்டதால், வாதீ ரானுானா என்னும் இடத்தில் தொழுகையை நிறைவேற்றினார். மெதீனாவில் அவர் நடத்திய முதல் ஜூம்ஆத் தொழுகை இதுதான்.