உள்ளூர் செய்திகள்

உண்மையான ஏழை

ஒருமுறை தோழர்களிடம், ''யார் ஏழை?'' என நபிகள் நாயகம் கேட்டதற்கு, ''பணம் இல்லாதவர்களே'' எனக் கூறினர். அதற்கு அவர், ''இறைவன் முன் எக்கதியும் அற்று நிற்பவரே ஏழை. அதாவது ஒருவர் சிலர் மீது அவதுாறுகளைச் சுமத்தி இருப்பார். அனுமதியின்றி சிலருடைய சொத்துக்களை அபகரித்திருப்பார். இதுபோல் தீய குணம் உள்ளவருடைய நன்மைகள், இவரால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும்'' என்றார். பார்த்தீர்களா... இதுபோல் பாவம் செய்பவர்களே உண்மையான ஏழை. இவர்களது நிலை வியாபாரியை போன்றதாகும். அதாவது ஒரு வியாபாரி ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வைத்துள்ளார். ஆனால் இரண்டாயிரம் ரூபாய் கடன்பட்டவராக இருந்தால் என்ன செய்வது? அதாவது ஒருவர் நல்லதை விட தீயதை அதிகமாக செய்து இருந்தால், அவரது நிலை என்னவாகும்?