வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு திருடனுக்கு அடுத்த திருடன் மேல் நம்பிக்கை வருமா!?
'சிறையிலிருந்து வெளியில் வந்து ஒரு மாதமாகி விட்டது. அவருக்கு பதவி கொடுக்கலாமே...' என ஆதங்கப்படுகின்றனர், டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஆதரவாளர்கள்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். மணீஷ் சிசோடியா தான், முதலில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். வழக்கமாக, முதல்வர்அல்லது அமைச்சராகஇருப்பவர், ஏதாவது ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு போய் விட்டால், உடனடியாக பதவியை ராஜினாமா செய்து விடுவர்.இதை பின்பற்றி, மணீஷ் சிசோடியா துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை; இது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.இந்நிலையில், 17 மாத சிறைவாசத்துக்கு பின், மணீஷ் சிசோடியா சமீபத்தில் ஜாமினில் வெளியில்வந்தார். ஆனால், அவருக்கு டில்லி அரசில் இன்னும் எந்த பதவியும் தரப்படவில்லை. 'கெஜ்ரிவால் தன் பதவியை ராஜினாமா செய்து, பெருந்தன்மையுடன் மணீஷ் சிசோடியாவுக்கு அந்த பதவியை தந்திருக்கலாம்...' என்ற பேச்சு டில்லியில் எழுந்துள்ளது. அங்குள்ள அரசியல்வாதிகளோ, 'முதல்வர் பதவியில்அமர்ந்து விட்டால், சிசோடியா தனக்கு துரோகம்செய்து விடுவார் என, கெஜ்ரிவாலுக்கு ஒரு பயம் இருக்கலாம்; அதனால் தான், அவர் தயங்குகிறார். அரசியலில் இது சகஜம் தானே...' என, கிண்டலாக கூறுகின்றனர்.
ஒரு திருடனுக்கு அடுத்த திருடன் மேல் நம்பிக்கை வருமா!?