உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ஓட்டு கேட்க முடியுமா?

ஓட்டு கேட்க முடியுமா?

'பதவியேற்ற மூன்று மாதத்திற்குள் ஒரு மனிதருக்கு அடுக்கடுக்காக இவ்வளவு சோதனைகள் வரக்கூடாது...' என கவலைப்படுகிறார், தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி.இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், செல்வாக்கான, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியை தோற்கடித்து, ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏராளமான இலவச வாக்குறுதிகளை அறிவித்தார், ரேவந்த் ரெட்டி. 'ஆறு வாக்குறுதிகள்' என்ற தலைப்பில் அவர் அறிவித்த இலவசங்கள், தெலுங்கானா மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.அவர் முதல்வர் பதவியில் அமர்வதற்கும் இதுவே காரணமாக அமைந்தது. இப்போது, அந்த வாக்குறுதிகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார், ரேவந்த் ரெட்டி.லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், மக்களிடம் ஓட்டு கேட்க செல்ல வேண்டும். அப்போது, 'சட்டசபை தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் என்னாச்சு?' என, வாக்காளர்கள் கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என தவியாய் தவிக்கிறார், ரேவந்த் ரெட்டி.வாக்குறுதிகளை நிறைவேற்றும் அளவுக்கு கஜானாவிலும் காசு இல்லை. 'வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டும் மக்களிடம் சென்று எப்படி ஓட்டு கேட்க முடியும். இதற்கு ஏதாவது தீர்வு உள்ளதா...' என புலம்புகிறார், முதல்வர் ரேவந்த் ரெட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ